விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

Update: 2023-01-29 20:02 GMT


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சி (AERO SPACE SKILL SECTOR COUNCIL) -யால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go first, Vistra, Air India போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்