கால்பந்து வீராங்கனை மரணத்துக்கு காரணமான டாக்டரை தூத்துக்குடியில்பணியமர்த்த எதிர்ப்பு
கால்பந்து வீராங்கனை மரணத்துக்கு காரணமான டாக்டரை தூத்துக்குடியில்பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், சென்னை பெரியார் நகர் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் 2 டாக்டர்கள் முதலில் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் டாக்டர் பால்ராம் சங்கர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு உள்ளார். பிரியா இறந்த உடன், 2 டாக்டர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த இடமாற்றம் தூத்துக்குடி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பால்ராம் சங்கரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பணி செய்ய அனுமதிக்க கூடாது என்று கூறி உள்ளனர்.