ஈரோட்டில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

struggle

Update: 2022-11-15 22:49 GMT


மாநகராட்சி, நகராட்சிகளே குடிநீர் திட்டங்கள், வடிகால் பணிகள், பாதாள சாக்கடை திட்டங்களை உருவாக்கி கொள்ள அரசு அனுமதித்து உள்ளதால், குடிநீர் வடிகால் வாரிய வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே குடிநீர் வரியை உயர்த்தி வாரியத்துக்கு வருவாயை ஏற்படுத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தில் தொகுப்பூதிய ஊழியர்களின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோட்டில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்