தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Worker commits suicide by hanging;

Update: 2022-11-15 20:54 GMT

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), கூலித்தொழிலாளி. இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்