சாலையில் புதைந்த சரக்கு வேன்

A cargo van buried on the road;

Update: 2022-11-15 20:33 GMT

ஸ்ரீரங்கம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் பள்ளங்களில் ஜல்லிகள் போட்டு நிரப்பி, சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவானைக்காவல் நடுக்கொண்டையம்பேட்டையில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த பகுதியில் உள்ள வாசுதேவன் தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலையில் சரக்கு வேன் வந்தபோது, திடீர் பள்ளம் ஏற்பட்டு, சரக்கு வேனின் பின்பகுதி சாலையில் புதைந்தது. இதையடுத்து உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளத்தில் இருந்து சரக்கு வேனை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்