தீக்காயமடைந்த தொழிலாளி சாவு

Burned worker died

Update: 2022-11-15 20:25 GMT

சோமரசம்பேட்டை:

பீடிபற்ற வைக்க முயன்ற போது...

இனாம் குளத்தூர் மாரியம்மன் கோவில் தென்றல் நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் பீடி பற்ற வைக்க தீப்பெட்டியை கொளுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீக்குச்சியில் இருந்து தீப்பொறி குடிசையில் பட்டது. இதையடுத்து குடிசையில் தீ மளமளவென பரவி ரங்கராஜ் மீது பற்றியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

தொழிலாளி சாவு

இதைக்கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் இனாம் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்