வாகனம் மோதி வாலிபர் பலி

Teenager killed in vehicle collision

Update: 2022-11-15 20:23 GMT

துவரங்குறிச்சி:

வாலிபர் சாவு

துவரங்குறிச்சியை அடுத்த எம்.இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 24). இவர் ஊரில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

துவரங்குறிச்சி- நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்