தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் 3 சதவீத அகவிலைப்படியினை ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிலுவையுடன் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள பின் பாக்கி சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வு காலப் பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அதன் தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில உதவித்தலைவர் அழகுமலை கோரிக்கைகள் குறித்து பேசினார்.