டேக்வாண்டோ போட்டியில் வெற்றி -மாணவனுக்கு பாராட்டு

டேக்வாண்டோ போட்டியில் வெற்றி -மாணவனுக்கு பாராட்டு

Update: 2022-11-15 19:15 GMT


மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில், பசுமலை மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் மாணவர் தருண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளி தாளாளர் பெர்னாண்டஸ் ரத்தின ராஜா, தலைமையாசிரியர் ஜம்புறோ தாமஸ் பிரின்ஸ், பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஜோயல் நெல்சன் பாக்கியராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் லோகேஸ்வரன், ராபின்சன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்