மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் வாலிபர் கைது
Sexual harassment of a student; Youth arrested in POCSO
திருச்சி பெரிய மிளகுபாைறயை சேர்ந்தவர் துரைராஜ் மகன் சரண் (வயது 29). இவர் ஒரு பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குபடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரணை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.