பெரம்பலூரில் நாளை மின் நிறுத்தம்

Power outage in Perambalur tomorrow

Update: 2022-11-15 18:45 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவிசெயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டுவசதிவாரியகுடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், எளம்பலூர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், இந்திராநகர், சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்