பள்ளிக்கு வந்த மாணவி மாயமானதால் பரபரப்பு

There is a commotion because the student who came to school has disappeared

Update: 2022-11-15 18:45 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் செந்துறை ெரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல் காலை நேரம் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வந்தவர் பள்ளியில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இந்த நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளிக்கு வந்த மாணவி புத்தக பையை பள்ளிகளில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆங்காங்கே உள்ள செக் போஸ்ட்கள் மற்றும் ரோந்து போலீசாரை முடுக்கிவிட்டார். மாயமான பள்ளி மாணவி கண்டுபிடிக்கும் பணியில் உறவினர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி செந்துறை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பள்ளிக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியை அவரது ஆட்டோவில் ஏற்றி வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். அப்போது அந்த மாணவியிடம் விசாரித்தபோது, தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்பதால் மாயமாகியதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். இதனால் செந்துறை பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்