போடி அருகே உள்ள மலைப்பகுதியான குரங்கணியில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு மிளகு, காபி, இலவம் பஞ்சு, ஏலக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தோட்டங்களுக்கு போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்தநிலையில் நேற்று குரங்கணி மலைப்பாதையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்ட பொறியாளர் ரமேஷ், கோட்ட உதவி என்ஜீனியர் தங்கராஜ் தலைமயில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் குவிந்த மண்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.