இரும்பு கடையில் திருடியவர் கைது
இரும்பு கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி, இரும்பு கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரியில் உள்ள திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்ப்புறம் முகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான இரும்பு விற்பனை செய்யும் கடை உள்ளது. இக்கடையில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடையில் திருடியது வடக்கு வேளார் தெருவை சேர்ந்த முத்தழகு (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுவை கைது செய்தனர்.