குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Water and Drainage Board workers protest
வெளிப்பாளையம்:
தொகுப்பூதிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நாகை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். . 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். தொகுப்பூதியர்களுக்கு நிலுகைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.