வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

Traders Association Demand Man Traders Association Demand Petition

Update: 2022-11-15 17:35 GMT

வேட்டவலம் 

சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வேட்டவலம் பேரூராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்கவும், குப்பை வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சுகந்தியிடம் அனைத்து வியாபாரிகள் நல சங்க தலைவர் குணசேகரன் தலைமையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில். ''கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்தனர். இந்த சூழலில் தற்போதைய வரி உயர்வு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும், மேலும் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட உள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்