புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது 32). இவருடைய கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக சிங்கம்புணரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்ேபரில் சிறப்பு சப்்-இன்ஸ்பெக்டர் சேவுகவிரையா மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது கடையில் 3 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.