அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

A.D.M.K. A group of activists

Update: 2022-11-15 18:45 GMT

கரியாப்பட்டினம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் பி.வி.கே.பிரபு தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். .வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் இருந்து கழக அமைப்புச் செயலாளராக பி.வி.கே. பிரபுவை நியமனம் செய்த ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவிப்பது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வெள்ள நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் பகுதியாக வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உரிய பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க ஆவன செய்ய தமிழக அரசை கேட்டு கொள்வது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த தமிழக அரசை வலியுறுத்துவது, மானங்கொண்டான் ஆற்றில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்