எல்.ஐ.சி. முகவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்ககோரி மனு
LIC Petition for constitution of separate welfare board for agents
எல்.ஐ.சி. முகவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்ககோரி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் தலைவர் நடேசன், செயலாளர் குமரவேல், பொருளாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என். அண்ணாதுரையை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கொண்டுவர உள்ள 'பீமா சுகம்' என்ற செயலி எல்.ஐ.சி. முகவர்களுக்கு ஆபத்தாக உள்ளது. எனவே அந்த செயலியை அறிமுகப்படுத்தக் கூடாது.
பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க வேண்டும். முகவர்களுக்கு கமிஷன் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கேரளாவில் உள்ளதைபோன்று முகவர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பெற்றால் ஏராளமான முகவர்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.