மாணவர்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்

Students should work hard to achieve the goal

Update: 2022-11-15 16:34 GMT

காட்பாடி

காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தொடக்க விழா இன்று நடந்தது.

விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதுபோல கடந்த ஆண்டு 951 கம்பெனிகள் வந்தன.

இந்த ஆண்டு இதுவரை 504 கம்பெனிகள் வேலைவாய்ப்பு கொடுக்க வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு மாணவருக்கு அதிகபட்ச சம்பளமாக ஒரு ஆண்டுக்கு ரூ.75 லட்சத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆண்டு இரண்டு மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் என அதிகபட்ச சம்பளம் கிடைத்ததுள்ளது என்றார்.

வி.ஐ.டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் நலன் உதவி இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார்.

மாணவர் நலன் இயக்குனர் நைஜூ உறுதிமொழி வாசிக்க மாணவர் பேரவை நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினரை மாணவர் நலன் உதவி இயக்குனர் சுஜாதா அறிமுகபடுத்தினார்.

சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் சாந்திலால் ஜெயின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வி.ஐ.டி.பல்கலைக்கழகமும், இந்தியன் வங்கியும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உலகத் தரத்திலான கல்வி வழங்கப்படுகிறது. உலக அளவிலும், தேசிய அளவிலும் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. மாணவர் பேரவை மூலம் மாணவர்களுக்கு தலைமை பண்பு வளரும்.

நீங்கள் என்ன ஆக வேண்டும் என முதலில் தீர்மானிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து உங்களுடைய லட்சியத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர்.

இருந்தாலும் நாங்கள் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு உதவி செய்தோம்.

வருங்காலம் உங்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. நீங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். வருங்காலம் உங்கள் கையில் உள்ளது. நீங்கள் தலைசிறந்த தலைவர்களாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாணவர் நலன் உதவி இயக்குனர் ஷர்மிளா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்