கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன
In Co-operative Sellers Association Saplings were planted
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளரும் கூட்டுறவு சங்கதலைவருமான எஸ்.ராஜேந்திரன், தலைமை தாங்கினார். சார் பதிவாளர் தர்மேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் பி.வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட இணை பதிவாளர் முருகேசன், துணை பதிவாளர்கள் பாலசுப்பிரமணி, சுவாதி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் டி.ரகுநாத், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விற்பனையாளர் மணி நன்றி கூறினார்.