எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள டி.சண்முகபுரம் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயஸ்ரீ தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வ விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறையில் கருவூட்டல், சினை பரிசோதனை குடல் புழு நீக்கம் ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை ஆய்வாளர் செல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.