தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்குகவாத்து பயிற்சி நிறைவு

In Tuticorin, the training of village guards has been completed

Update: 2022-11-15 18:45 GMT

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் கவாத்து பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் போலீஸ் சூப்பரண்டு பாலாஜிசரவணன் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து பணிபுரிய மீனவ இளைஞர்கள் 22 பேர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் ஆயுதப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டது. 45 நாட்கள் நடந்த பயிற்சி நேற்று முடிவடைந்தது. இவர்களுக்கு கவாத்து உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

பயிற்சி நிறைவுநாளான நேற்று ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். அப்போது, நீங்கள் அனைவரும் 45 நாட்களில் சிறந்த முறையில் கவாத்து பயிற்சி பெற்றிருப்பது பாராட்டுக்கு உரியது. குறுகிய காலத்தில் நீங்கள் நல்லமுறையில் பயிற்சி பெற்றிருப்பது ஊர்க்காவல் படையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. சீருடையணிந்து சமுதாயத்துக்கு நன்மைகள் செய்வதற்கு உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஊர்க்காவல் படை வட்டார துணை தளவாய் கவுசல்யா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்