டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
கொள்ளிடத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கொள்ளிடம்:
சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், வட்டார சுகாதாரத்துறை சார்பில் கொள்ளிடத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, கண்களில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றார். இதில் கலந்து கொண்டவர்கள் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், சுந்தரம், கிராம சுகாதார செவிலியர் ரம்யா தேவி, மக்களைதேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் நன்றி கூறினார்.