ஓய்வு பெற்ற விமான படை ஊழியர் பலி

ஓய்வு பெற்ற விமான படை ஊழியர் பலி

Update: 2022-09-12 16:01 GMT


சூலூரை அடுத்துள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 76). இவர் இந்திய விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சொக்கலிங்கம் நேற்று தனது மகள் மீனாவை கருமத்தம்பட்டியில் பஸ் ஏற்றிவிடுவதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது குமாரபாளையம்-செங்கத்துரை சாலையில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்