கார் மோதி டிரைவர் பலி

கொடைரோடு அருகே கார் மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-08-15 18:58 GMT

கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் ஜெயமல்லன் (வயது 49). வேன் டிரைவர். இவர், பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக ஜெயமல்லன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஜெயமல்லன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்