மதுரை: கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவு - ரூ.165 கோடி பறிமுதல்...!
மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.;
மதுரை,
மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 4 நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்த்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறையின் சோதனை நிறைவடைந்து உள்ளது. இந்த சோதனையில் ரூ.165 கோடி பணம், 200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.