சிவகாசி, விருதுநகரில் மின்சாரம் நிறுத்தம்

சிவகாசி, விருதுநகரில் மின்சார வினியோகம் தடைப் படும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-21 15:27 GMT

சிவகாசி, ஜூன்.22-

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி இ.எஸ்.ஐ., சாட்சியாபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் ஆனையூர், விளாம்பட்டி, அவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீமாரியம்மன்நகர், லட்சுமியாபுரம், மாரனேரி, உராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடு ரெட்டியபட்டி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, போலீஸ்காலனி, இ.பி.காலனி, அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் தடைப் படும் என்று மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள புல்லலக்கோட்டை மற்றும் நந்திரெட்டியபட்டி கிராமங்களில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்