ஹூண்டாய் வெர்னா எஸ் பிளஸ்

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை இணைத்து வெர்னா எஸ் பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-05-26 16:50 GMT
இதன் விலை சுமார் ரூ.9.60 லட்சம் முதல் சுமார் ரூ.10.81 லட்சம் வரை. இதே போல எஸ்.எக்ஸ். மாடலிலும் இத்தகைய வசதியை புகுத்தியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.10.98 லட்சம் முதல் சுமார் ரூ.13.36 லட்சம் வரை உள்ளது. நடுத்தர பிரிவில் செடான் காராக உள்ள இந்த மாடலில் 8 அங்குல தொடு திரையுடன், முன்புறம் இரண்டு ஏர் பேக்குகளைக் கொண்டதாக இது வந்துள்ளது.

வயர்லெஸ் போன் சார்ஜர், குரூயிஸ் கண்ட்ரோல், புரொஜெக்டர் முகப்பு விளக்கு, அலாய் சக்கரம், மேற்கூரை திறந்து மூடும் வசதி, ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. 115 ஹெச்.பி. திறனை வெளியிடும் வகையிலான 1.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது. டீசல் மாடல் 120 ஹெச்.பி. திறனை வெளியிடும். மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது.

ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ராபிட், போக்ஸ்வேகன் வென்டோ, மாருதி சுஸுகி சியாஸ், டொயோடா யாரிஸ் உள்ளிட்ட மாடல்கள் அனைத்தும் இதற்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்