மும்ராவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மும்ராவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி ஆனார்.;
தானே,
மும்ரா சாய்நிக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியே வந்தார். அப்போது கால் இடறியதால் மின்வயர் மீது தவறி விழுந்தார். இதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக கல்வா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனி்ன்றி ரமேஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.