சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை வகோலா பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 20-ந் தேதி கழிவறைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் அவளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதன்படி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.