புனேயில் ஐ.டி. பெண் ஊழியரை கற்பழித்த வாலிபர் கைது
புனேயில் ஐ.டி. பெண் ஊழியரை கற்பழித்த வாலிபர் போலீசார் கைது செய்தனர்.
புனே,
புனேயில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பான்தான் பகுதியில் வசிக்கும் 31 வயது வாலிபர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6-ந் தேதி உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியரை சாப்பிட்ட வீட்டுக்கு அழைத்து இருந்தார். இதையடுத்து வீட்டுக்கு சாப்பிட வந்த பெண் ஊழியரை, வாலிபர் மது கொடுத்து மயக்கி கற்பழித்து உள்ளார். மேலும் அவர் அந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார்.
இந்தநிலையில் அவர் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்புவேன் என மிரட்டி கடந்த 10, 25-ந் தேதியும் பெண் ஊழியரை வீட்டுக்கு அழைத்து கற்பழித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் ஊழியரை கற்பழித்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.