'லிப்ட்' அறுந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

‘லிப்ட்’ அறுந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2023-09-11 19:15 GMT

தானே, 

தானே பால்கும் பகுதியில் புதிதாக 40 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 'லிப்ட்' அமைக்கும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 7 தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரவு 7 மணி அளவில் தொழிலாளிகள் 'லிப்ட்' இயங்கும் திறனை சோதனை செய்தனர். அப்போது, 'லிப்ட்'டின் கம்பி அறுந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவே உயிரிழந்தார். இதனால் 'லிப்ட்' விபத்தில் சிக்கிய 7 தொழிலாளிகளும் உயிரிழந்து உள்ளனர். பலியானவர்கள் மகேந்திரா சவுபால் (வயது32), ருபேஷ்குமார் தாஸ் (21), ஹாருன் சேக் (47), மித்திலேஷ் (35), காரிதாஸ் (38), சுனில் குமார் (21) உள்பட 7 பேர் என தெரியவந்தது. போலீசார் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்