மும்பையில் 'லிப்ட்' அறுந்து விழுந்து தொழிலாளி பலி

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.;

Update:2023-06-27 00:15 IST

மும்பை, 

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

லிப்ட் அறுந்து விபத்து

மும்பை குர்லா நேரு நகர் பகுதியில் 19 மாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சம்பவத்தன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 16, 17-வது மாடியில் கிடந்த இரும்பு சாமான்களை லிப்டில் கீழே இறக்கி கொண்டு இருந்தனர். 17-வது மாடியில் கிடந்த இரும்பு சாமான்களை நவுசித் (18) என்ற தொழிலாளி எடுத்து வந்து லிப்டில் இருந்த தொழிலாளி ரிஸ்வானிடம் (28) கொடுத்தார். அவர் இரும்பு சாமான்களை லிப்டில் அடுக்கி கொண்டு இருந்தார். திடீரென லிப்ட் அறுந்து 17-வது மாடியில் இருந்து கீழ் நோக்கி இறங்கி தரை தளத்தில் விழுந்தது.

பரிதாப சாவு

இந்த பயங்கர விபத்தில் லிப்ட்டில் இருந்த ரிஸ்வான் படுகாயம் அடைந்தார். அவரை தொழிலாளர்கள் மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தொழிலாளியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நேரு நகர் போலீசார் கட்டுமான ஒப்பந்ததாரர் ஜெயந்தி லால் பாட்டீலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்டில் அதிக சுமை வைத்த காரணத்தால் அது அறுந்து விழுந்து இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்