யவத்மாலில் மின்னல் தாக்கி பெண் பலி

யவத்மாலில் மின்னல் தாக்கியத்தில் பெண் ஒருவர் பலியானார்.;

Update:2022-08-07 23:27 IST

யவத்மால்,

யவத்மால் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கீதாஞ்சலி கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் 5 பேருடன் விவசாய பணிகளில் ஈடுபட்டார். அப்போது, மின்னல் அவர்கள் மீது தாக்கியது. இந்த சம்பவத்தில் 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினார். உடன் இருந்த 5 பேர் தீக்காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல மற்றொரு சம்பவத்தில் மாண்டுவி கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்றிருந்த 21 ஆடுகள் மீது மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் 21 ஆடுகளும் செத்தது.

Tags:    

மேலும் செய்திகள்