பெண் எரித்து கொலை: கணவர், மைத்துனிக்கு 7 ஆண்டு கடுங்காவல் - செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை எரித்து கொலை செய்த கணவர், மைத்துனிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;

Update: 2023-10-15 19:15 GMT

தானே, 

பெண்ணை எரித்து கொலை செய்த கணவர், மைத்துனிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

உயிருடன் தீ வைத்து கொளுத்தினர்

தானே மாவட்டத்தை சேர்ந்தவர் நூருதீன் கான் (வயது27). இவர் 2017-ம் ஆண்டு அமீனா என்ற பெண்ணை திருமணம் செய்தாா். நூருதீன் கான் அக்கா தாகீரா, தங்கை ஜெரினாவுடன் சேர்ந்து மனைவி அமீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி காலை நூருதீன் கான் வழக்கம் போல சகோதரிகளுடன் சேர்ந்து கொண்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தினார். இதில் தாகீரா திடீரென மண்எண்ணையை எடுத்து அமீனா மீது ஊற்றினார். பின்னர் ஜெரினா கூறியதன் பேரில் நூருதீன் கான், அமீனா மீது தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த அமீனா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மே 3-ந் தேதி சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

7 ஆண்டு கடுங்காவல்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூருதீன் கான், அவரது சகோதரிகளை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு பெண்ணை உயிருடன் எரித்து கொலை செய்த கணவர் நூருதீன், மைத்துனி தாகீராவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மற்றொரு மைத்துனி ஜெரினாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்