விநாயகர் சதுர்த்திக்கு ரூ.9 ஆயிரம் கோடி வியாபாரம்- முதல்-மந்திரி ஷிண்டே தகவல்

விநாயகர் சதுர்த்திக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.;

Update:2022-09-28 10:30 IST

மும்பை,

விநாயகர் சதுர்த்திக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 9-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.

பொது மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டுகளில் சதுர்த்திக்கு தேவையான அலங்கார பொருட்கள், விநாயகர் சிலை, பூஜை பொருட்கள், ஆடைகளை வாங்கினர். இதேபோல வீதிதோறும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ரூ.9 ஆயிரம் கோடி

தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பிரபல மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை வணங்கினர். இதன் காரணமாக அதிகளவில் வியாபாரம் மற்றும் தொழில்கள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பலன் அடைந்தனர்.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியின் போது மாநிலத்தில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தொழில் நடந்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்