பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.;
தானே,
பயந்தரில் மெட்ரோ பணிமனை அமைக்க அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு
தானே மாவட்டம் பயந்தர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிமனை கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பயந்தரில் உள்ள ராய், முர்தா, மோர்பே கிராமங்களை சோ்ந்த மக்கள் மெட்ரோ பணிமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் கூட்டம் நடைபெற்றது.
அரசு உத்தரவு வரவில்லை
கூட்டத்துக்கு பிறகு அசோக் பல்வந்த் என்பவா் கூறியதாவது:- மெட்ரோ பணிமனை திட்டத்தால் ராய், முர்தா, மோர்பே கிராமங்கள் பாதிக்கப்படும். திட்டத்துக்காக வீடுகளை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்-மந்திரியை சந்தித்து பேசினோம். இதையடுத்து அரசு பயந்தரில் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மெட்ரோ பணிமனையை மாற்ற முடிவு செய்தது. ஆனால் அதுதொடர்பாக இதுவரை அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.