உத்தவ் சிவசேனாவை சேர்ந்தவர்: மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவில் இணைந்தார்
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார்.;
மும்பை,
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த பெண் தலைவர் நீலம் கோரே. இவர் மேல்-சபை துணை தலைவராக உள்ளார். ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்த போது, உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். அஜித்பவார் கூட்டணி ஆட்சியில் இணைந்ததால் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே குழப்பம் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே சிவசேனாவுக்கு சென்றது உத்தவ் தாக்கரே தரப்புக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.