மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

காரேகாவ் சுங்கச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-07-17 17:34 GMT

தானே, 

மும்பை கோவண்டியை சேர்ந்தவர் முசாமில் சேக் (வயது25). இவரது நண்பர் நவுசாத் அன்சாரி(25). இவர்கள் நேற்று  மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மும்பை-நாசிக் நெடுஞ்சாலை வழியாக கோவண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 8.30 மணி அளவில் காரேகாவ் சுங்கச்சாவடி மேம்பாலத்தில் வந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சாலையில் விழுந்த 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இது பற்றி அறிந்த பிவண்டி நார்போலி போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்