இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர்; தூதர் தகவல்

இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக இஸ்‌ரேல் தூதர் தெரிவித்துள்ளார்

Update: 2023-10-11 19:00 GMT

மும்பை, 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோபி சோசானி நேற்று மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலில் தங்கியிருக்கும் இந்திய குடிமக்கள் யாரும் மரணமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் இல்லை. இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்தி நடிகை நுஷ்ரத் பரூச்சா சமீபத்தில் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்