மது போதையில் தகராறு செய்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-08 00:15 IST

தானே, 

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

தானே மாவட்டம் டிட்வாலா, பனேலி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் மோரே (வயது49). இவரது மனைவி பிரனீதா (38). சம்பவத்தன்று பிரவீன் மோரே அளவுக்கு அதிகமாக மதுகுடித்து உயிரிழந்து விட்டதாக பிரனீதா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பிரவீன் மோரேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் பிரவீன் மோரே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி பிரனீதா தான் கணவரை கொலை செய்தது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மனைவி கைது

தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் மோரே மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்து உள்ளார். மேலும் அவர் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். சம்பவத்தன்றும் அவர் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டைபோட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தூங்கி கொண்டு இருந்த போது கணவன் பிரவீன் மோரேயின் கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரனீதாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்