திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை

ஜவாஸ்கேடா பகுதியில் திருடன் என நினைத்து வாலிபரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-08-28 19:00 GMT

மும்பை, 

ஜல்னா மாவட்டம் ஜவாஸ்கேடா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு சித்தார்த் மன்டாலே (வயது25) என்ற வாலிபர் நடந்து சென்றார். கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருட வந்ததாக நினைத்து அவரை 4 பேர் பிடித்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் காயமடைந்த வாலிபரை 4 பேரும் சேர்ந்து குவாரியில் வீசி சென்றனர். இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தாரேகாவ் பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஜாதவ், கைலாஷ் ஜாதவ், குந்திலிக் திர்கே, துலசிராம் கெய்க்வாட் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்