காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது- உத்தவ் தாக்கரே அறிக்கை

காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-05 15:22 GMT

மும்பை, 

காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார்.

உத்தவ் வேதனை

காஷ்மீரில் இந்துக்கள், பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காஷ்மீரில் இந்துக்கள், பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தொிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அவர்களின் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் திரும்புவது கனவாக உள்ளது. ஆனால் அவர்கள் குறி வைத்து கொல்லப்படுகின்றனர். பண்டிட்டுகளின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது.

மராட்டியம் ஆதரவு

பண்டித் சமூகத்திற்கு ஆதரவாக அவர்களுக்கு பின்னால் மராட்டியம் இருக்கும். காஷ்மீர் பண்டிட் தலைவர்களுடன் அரசு தொடர்பில் உள்ளது. அவர்களின் பாதுகாப்புக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டு சிவசேனா ஆட்சியின் போது மராட்டியத்தில் காஷ்மீர் பண்டிட் பிள்ளைகளுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை பால் தாக்கரே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்