தன்னை பிடிக்க வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பிளேடால் தாக்கிய ரவுடி; மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

மும்பையில் தன்னை பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டரை பிளேடால் தாக்கிய ரவுடி மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.;

Update: 2023-09-24 19:30 GMT

மும்பை, 

மும்பையில் தன்னை பிடிக்க வந்த சப்-இன்ஸ்பெக்டரை பிளேடால் தாக்கிய ரவுடி மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

மும்பை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் குலாம் முஸ்தபா சேக் (வயது30). ரவுடியான இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி 2021-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதுதவிர பல்வேறு வழக்குகள் குலாம் முஸ்தபா மீது உள்ளது. இதனால் அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் கப் பரடே பகுதியில் சுற்றித்திாிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் சென்றனர். போலீசார் வேர்ல்டு டிரேடு சென்டர் பகுதியில் வாலிபரை பார்த்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ருபேஷ்குமார் வாலிபரை பிடிக்க சென்றார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பிளேடால் குலாம் முஸ்தபா சேக், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினார். தாக்குதலில் அவரின் கையில் 4 இடங்களில் வெட்டு விழுந்தது.

மனநலம் பாதிப்பு

இதைப்பார்த்து மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாாித்து கொண்ட அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை பிளேடால் தாக்கிய வாலிபரை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த குலாம் முஸ்தபா சேக் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தானே மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்