திருடிய நகைகளை எம்.எல்.சி. பிரசாத் லாட் பங்களா அருகே மறைத்து வைத்த ஆசாமி

திருடிய நகைகளை எம்.எல்.சி. பிரசாத் லாட் பங்களா அருகே மறைத்து வைத்த ஆசாமி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-07-10 23:06 IST

மும்பை, 

மும்பை மாட்டுங்கா பகுதியில் பா.ஜனதா கட்சி எம்.எல்.சி. பிரசாத்லாட் பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டின் முன்பு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவரது பங்களா வீட்டின் முன்பு துணியால் ஆன பை ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டனர். அதனை எடுத்து போலீசார் பிரித்து பார்த்த போது நகைகள், பணம், சாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை மீட்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் புகுந்த ஆசாமி நகை, பணத்தை திருடி உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இருப்பதை கண்ட ஆசாமி அதிகாலையில் தப்பி செல்ல வசதியாக எம்.எல்.சி. பிரசாத் லாட் வீட்டின் அருகே பையை மறைத்து வைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மாட்டுங்கா போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்