மன்மோகன் சிங் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அதிகப்பட்ச வளர்ச்சியை எட்டியது; பிறந்தநாள் வாழ்த்தில் சரத்பவார் புகழாரம்
மன்மோகன் சிங்கின் ஆட்சியில் தான் நாட்டின் பொருளாதாரம் அதிகப்பட்ச வளர்ச்சியை எட்டியது என்று பிறந்தநாள் வாழ்த்தில் சரத்பவார் புகழாரம் சூட்டியுள்ளார்;
மும்பை,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது 'எக்ஸ்' தளத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டியது. மேலும் பொருளாதாரம் அதிகப்பட்ச வளர்ச்சி விகிதத்தை எட்டியது. அவரது நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார். சரத்பவார், மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் மத்திய வேளாண் துறை மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.