கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி; பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்

வடலா-செம்பூர் லிங்க் ரோடு பகுதியில் கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2023-09-21 20:00 GMT

மும்பை, 

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் சிங்கால் (வயது38). இவர் கடந்த 17-ந்தேதி இரவு பிறந்தநாள் கொண்டாட நண்பருடன் வடலாவில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வடலா-செம்பூர் லிங்க் ரோடு பகுதியில் வந்த போது 18 டயர் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. கமலேஷ் சிங்கால் மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை முந்த முயன்ற போது டயர் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் அமர்ந்திருந்த கமலேஷ் சிங்கால் சாலையில் தவறி விழுந்தார். அப்போது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் கமலேஷ் சிங்கால் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கமலேஷ் சிங்காலை மீட்டு ராஜாவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலேஷ் சிங்கால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்