டோம்பிவிலியில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டுபலாத்காரம் - 2 பேர் கைது

டோம்பிவிலின் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டுபலாத்காரம் செய்த 2 பேரரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-09-21 20:00 GMT

தானே, 

தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 17-ந்தேதி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மற்றொரு நண்பர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த 2 பேர் ஆண் நண்பரை மதுபானம் வாங்கி வருமாறு கூறி வெளியே அனுப்பினர். பின்னர் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து விஷ்ணு நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பலாத்காரம் செய்த 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்தனர். போலீசார் அவர்கள் மீது பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்