துர்கா தேவி ஊர்வலத்தில் 2 நாட்டு துப்பாக்கிகள், 11 தோட்டாக்களுடன் வாலிபர் சிக்கினார்
துர்காதேவி ஊர்வலத்தின் போது 2 நாட்டு துப்பாக்கிகள், 11 தோட்டாக்களுடன் வாலிபர் பிடிபட்டார்;
மும்பை,
மும்பையில் நேற்று முன்தினம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி, தசரா பொதுக்கூட்டங்கள் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அனேக இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாந்திராவில் நடந்த துர்கா தேவி சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் நாக்பூரை சேர்ந்த அமித்(வயது27) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் 2 நாட்டு துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.